#BREAKING : கடவுள் ராமர் நேபாளி; இந்தியர் அல்ல – நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி

ராமர் ஒரு நேபாளி அவர் இந்தியர் அல்ல என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி சர்ச்சை கருத்தை தெரிவித்திருப்பதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபகாலங்களில் நேபாளத்திற்கும், இந்தியாவுக்குமான உறவில் சிக்கல்கள் உருவாகி, நிலைமை தற்போது தான் சீரடைந்து வரத்தொடங்கியிருக்கிறது.

இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு மற்றும் கருத்துக்கள் காரணமாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலக வேண்டுமென அவரது சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது.

இந்திய பகுதிகளை உள்ளடக்கி நேபாளத்தின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒப்புதலும் பெறப்பட்டது.

இது இருநாட்டு உறவை பலவீனப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் பகவான் ராமர் ஒரு நேபாளி, அவர் இந்தியர் அல்ல, உண்மையான அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளதாக நேபாள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முடிவுக்கு வரவேண்டிய இருநாட்டு உறவில் நீடிக்கும் சிக்கல், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் இன்றைய பேச்சால் மீண்டும் புதிதாக தொடங்கலாம் என கருதப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே