#BREAKING : சென்னையில் ஜூலை 27 வரை போராட்டம் நடத்த தடை

சென்னையில் ஜூலை 27 வரை போராட்டம் நடத்தத் தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது இம்மாத இறுதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இம்மாத இறுதி வரை தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது என்று தமிழக அரசு திங்கள் மாலை அறிவிப்பினை வெளியிட்டது.

இந்நிலையில் சென்னையில் ஜூலை 27 வரை போராட்டம் நடத்தத் தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னையில் ஜூலை 27 வரை பேரணி, ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி உள்ளிட்ட எந்த வகையான போராட்டங்களும் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே