#BREAKING : தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 18) 5,709 பேருக்கு கொரோனா பாதிப்பு; 121 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று 5709 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 49-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் மேலும் 5,709  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 121 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,850 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,89,787-ஆக உயர்ந்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே