”தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்தவர்” பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.

அவரின் குரு பூஜையான இன்று(அக்., 30) அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என கூறி நெட்டிசன்கள், டுவிட்டரில் திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக #GoBackStalin என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த மற்றும் நினைவு நாள் இன்று(அக்., 30). ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவிடத்தில் ஜெயந்தி மற்றும் குரு பூஜை நடப்பது வழக்கம்.

அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரது நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களும், திமுக., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்பு பசும்பொன் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் முத்துராமலிங்க தேவருக்கு திமுக., தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த சமூகவலைதளத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

”தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் வாழ்ந்தவர் தேவர். ஆன்மிகத்தில் அவருக்கு அதிக நாட்டம் உண்டு.

ஆனால் ஆன்மிகத்தையும், இந்து மதத்தை பற்றி மட்டும் எப்போதும் அவதூறு செய்யும் திமுக., தலைவர் ஸ்டாலின், தேவருக்கு அஞ்சலி செலுத்த கூடாது என கூறி #GoBackStalin என்ற ஹேஷ்டாக்கை பதிவிட்டு அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர்.

மேலும் அரசியலுக்காக மட்டும் இது போன்று அவர் செய்வதையும் பலரும் சுட்டிக்காட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் டுவிட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டாக்கு உடன் #Pasumpon, #தேவர்ஜெயந்தி போன்ற ஹேஷ்டாக்குகளும் டிரெண்ட் ஆனது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே