பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகைக்கு எதிராக சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், பீகாரில் பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோர் இன்று தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் மோடியும் ராகுலும் பிரச்சாரம் செய்ததால், அம்மாநிலத்தல் அரசியல் சூடு பற்றிக் கொண்டது. பிரதமர் மோடி நாளையும் பீகாரில் தமது தேர்தல் பிரசாரத்தை தொடர உள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடி பீகார் வருகைக்கு எதிராக #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங்கி வருகிறது.

இந்த ஹேஷ்டேக் பீகாரில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே