வேப்பூர் அருகே நடைபெற்ற சந்தையில் 5 மணி நேரத்திலேயே ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

தற்போது அங்கு பராமரிப்பு பணி நடைபெறுவதால், தற்காலிகமாக ஆட்டுச் சந்தை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சந்தையில் வேப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலை 4 மணிக்கே சந்தை தொடங்கப்பட்டது.

சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு ,கருப்பு ஆடு, மாலாடு உள்ளிட்ட பல வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இதனை வாங்க சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, நாகை உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் சந்தையில் குவிந்தனர்.

பண்டிகை காலம் என்பதால் ஒரு ஆட்டின் விலை ரூ.2000 உயர்த்தப்பட்டு ரூ.7,000 முதல் 20,000 வரையில் விற்பனை செய்யப்பட்டது.

சந்தை தொடங்கியதில் இருந்து காலை 8 மணிக்கு உள்ளாகவே சுமார் 7500 ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், அதன் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என்றும் கூறினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே