அவர் அரசியல் தெளிவற்றவர் : ராகுல் காந்தி குறித்து ஒபாமா கருத்து..!!

பதற்றமானவர், பக்குவப்படாத தலைவர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

பராக் ஒபாமா “எ பிராமிஸ்ட் லாண்ட்” என்ற தலைப்பில் நினைவுக்குறிப்பு எழுதியுள்ளார்.

அதில், உலக உளவில் தான் சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள் குறித்து தெரிவித்துள்ளார். அந்த நூல் குறித்து தி நியூயார்க் டைம்ஸ் விமரிசனம் எழுதியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “பதற்றமானவர், பக்குவப்படாத தலைவர், மாணவரைப் போல பாடங்களை நன்றாகப் படித்து, ஆசிரியரை ஈர்க்கும் திறமை படைத்தவராக இருக்கலாம். 

ஆனால், குறிப்பிட்ட விஷயத்தில் ஆழ்ந்த அறிவு பெறுவதற்கான ஆர்வமோ அல்லது தகுதியோ இல்லாதவராக உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து குறிப்பிடுகையில், அமெரிக்க முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் பாப் கேட்ஸ், மன்மோகன் சிங் இருவரிடமும் எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத ஒற்றுமை இருப்பதைக் கண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் தாயும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி குறித்து குறிப்பிடுகையில், எங்களிடம் சார்லி கிறிஸ்ட் மற்றும் ரஹ் இமானுவேல் போன்ற ஆண்களின் அழகு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சோனியா காந்தியைப் போல, ஒன்று அல்லது இரு சம்பவங்கள் தவிர்த்து பெண்களின் அழகு குறித்துச் சொல்லப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “உடல்ரீதியாக அவர் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் பற்றி குறிப்பிடுகையில், மிகவும் ஒழுக்கமான, நேர்மையான, விசுவாசமான மனிதர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

2010 ஆண்டு ஒபாமா அவரது மனைவியுடன் இந்தியா வந்திருந்தபோது அப்போதைய பிரதமர் மனமோகன்சிங், அவரது மனைவி குர்ஷரன் கவுர் ஆகிய இருவருடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே