அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது.
கைதி படத்தின் புரொமோஷனுக்காக லாக்கப் செட் பல பிரபல திரையரங்குகளில் போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா பேக்ரவுண்ட் போலீஸ் ஸ்டேஷன் செட் போலவே அமைக்கப்பட்டுள்ளது.
நிச்சயம் கைதி படத்தை போலவே மாஸ்டர் படத்திலும் போலீஸ் ஸ்டேஷன், ரவுடிசம் என பல விஷயங்கள் ஹைலைட் படுத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது.
இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய்யின் அம்மா ஷோபனா பங்கேற்றுள்ளனர்.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பாளர், சோபனா அம்மாவிடம் இப்போ நடிகர் விஜய்கிட்ட என்ன கேட்க விரும்புறீங்க? என்ற கேள்விக்கு, விஜய் எனக்கு ஒரு ஹக் தரணும் என பதில் கூறினார்.
அடுத்த நொடியே, தனது அம்மா மற்றும் அப்பாவை நடிகர் விஜய் கட்டிப் பிடித்து அன்பு மழை பொழிந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், தளபதி விஜய்க்கு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கொடுத்த முத்த புகைப்படம் வேற லெவலில் வைரலானது.
இந்நிலையில், அந்த தருணத்தை ஓவர்டேக் செய்யும் மகிழ்ச்சி தருணமாக, நடிகர் விஜய் தனது பெற்றோரை கட்டிப் பிடித்து பாசத்தை கொட்டியுள்ளது பார்க்கப்படுகிறது.