சிறுமி பாலியல் வன்கொடுமை – இன்ஜினியர் போக்சோவில் கைது..!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி(21). இவர் டிப்ளமோ இன்ஜினியர்.

கலியமூர்த்தி அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமியும் இவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். அந்த சிறுமி நர்சிங் டிப்ளமோ படித்து வந்திருக்கிறார்.

சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி நாச்சிகுளம் பகுதிக்கு அழைத்துச் சென்ற கலியமூர்த்தி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், கலியமூர்த்தியை நேரில் சென்று கண்டித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், வேதாரண்யம் காவல் நிலையத்திலும் புகாரளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில், கலியமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே