தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

சற்றுமுன் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தபால் வாக்குகளில் கணக்கின்படி திமுக 11 இடங்களிலும் அதிமுக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

பொதுவாக தபால் வாக்குகளில் திமுகதான் முன்னிலையில் இருக்கும் என்பதைப் போலவே இந்த முறையும் தபால் வாக்குகளில் திமுக முன்னிலையில் இருந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் சிறிது நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதன் முடிவுகள் வரும்போதுதான் உண்மையிலேயே எந்த கட்சி முன்னிலை உள்ளது என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே