சஸ்பெண்டை வாபஸ் பெறுங்கள்… திமுக தலைமைக்கு கு.க. செல்வம் பதில் கடிதம்!!

சஸ்பெண்டை வாபஸ் பெறுங்கள் என தி.மு.க. தலைமைக்கு ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ -வாக இருந்த கு.க. செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அண்மையில் டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் கு.க. செல்வம் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அதனையடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் அவசர ஆலோனையில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், தி.மு.க தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் அவர்கள், கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் தற்பொழுது பதில் கடிதம் ஒன்றை அளித்துள்ளார். அதில், இயற்கை நீதிக்கு விரோதமானது என்பதால் என்னை சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுங்கள். பாஜகவைச் சேர்ந்த பிரதமர் மோடி கலைஞரை நேரில் சந்தித்து அனைவருக்கும் தெரியும். கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல. நான் பொய்யாக, அவதூறாக என்ன சொன்னேன் என நோட்டீஸ் கடிதத்தில் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே