பொதுத்தேர்வு என்பது சிறார்கள் மீதான உளவியல் தாக்குதல் – திருமாவளவன்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பள்ளிக்குழந்தைகள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அக்கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் கிராமசபை கூட்டங்களில் இயற்றப்படும் தீர்மானங்களை நிறைவேற்றும் நிலையில் தமிழக அரசு அதிகார வலிமை பெற்றவர்களாக இல்லை எனக் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே