ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என தமிழக முதல்வர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்ததை திரும்ப பெற வலியுறுத்தி, பிப்ரவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மக்களிடம் கையெழுத்து பெற்றிடும் இயக்கம் நடத்தப்படும் என கூறினார்.
குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கருத்தை ஏற்க முடியாது எனவும்; இப்பிரச்னையில் அமைச்சர் ஓ.எஸ். மணியனே பாதிக்கப்படும் சூழல் உள்ளதாகவும் அவர் அச்சம் தெரிவித்தார்.
மக்களின் எதிர்ப்பை மீறி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முன் வந்தால், மிக தீவிரமான போராட்டங்களை தாங்கள் மேற்கொள்வோம் எனவும் முத்தரசன் தெரிவித்தார்.