தற்போது கொரோனா வைரசால் எரிசக்தி சந்தையில் கடும் சரிவு ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது.
இதனால் கடந்த மாதம் சென்னையில் மானியமில்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.761.50 ஆக இருந்து வந்த நிலையில் இந்த மாதம் 192 ரூபாய் குறைந்து ரூ.569.50 விற்பனையாகவுள்ளது.
இதேபோல் டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.162.50 குறைந்து தற்போது, ஒரு சிலிண்டர் ரூ.581.50 ஆகவும்; மும்பையில் ரூ.714.50 இருந்து குறைந்து ரூ.579 ஆகவும், கொல்கத்தாவில் 190 ரூபாய் குறைந்து ரூ.584.50 ஆக இந்த மாதம் விற்பனையாகவுள்ளது.
மேலும் மானியமில்லாத வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.1404 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.259.50 குறைந்து, ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.