தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் ராமசாமி என்பவர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அதனை அவசரமாக பட்டியலிடக் கோரி வழக்கறிஞர் ராமசாமி தரப்பினர் முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியானது.