தேனியில் ஒரே நாளில் 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 454 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 7,642 ஆக அதிகரித்துள்ளது. தேனியில் நேற்று மட்டும் 351 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்றுவரை தேனியில் கொரோனா பாதித்த 4344 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று வரை, 2,758 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,212 ஆக அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே