குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய பிரைட் ரைஸ்..!!

நேபாளத்தை பூர்விகமாக கொண்ட சந்தோஷ் – ஆர்த்தி தம்பதியர் திருப்பூரில் வாடகை வீட்டில் வசித்தனர். இவர்களுககு 7 மற்றும் 4 வயதுகளில் மகன் மற்றும் மகன் இருந்தனர்.

சந்தோஷ் அருகில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ப்ரைட் ரைஸ் தயார் செய்யும் பணிபுரிந்து வந்துள்ளார்.

தனது இரண்டு குழந்தைகளுக்கு விருப்பமான உணவு என்பதால் சந்தோஷ் வேலை முடிந்து தினமும் பிரைட் ரைஸ் கொண்டு வந்து குழந்தைகளுக்கு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

சந்தோஷ் வேலை முடிந்து வீட்டுக்கு வருவது இரவு 11 மணிக்கு என்பதால் குழந்தைகள் தூங்கிவிடும், பின் தூக்கி உணவை ஊட்டி உறங்க வைப்பது தான் சந்தோஷின் வேலை என கூறப்படுகிறது.

சந்தோஷ், சம்பவ தினத்தன்றும் வழமை போல் பிரைட் ரைஸ் கொண்டு வந்துள்ளார்.

அப்போது உறங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி உணவை ஊட்டிய நிலையில், குழந்தைகள் அப்படியே உறங்கி உள்ளனர்.

மறுநாள் காலையில் எழுந்த சந்தோஷ் தனது குழந்தைகளை எழுப்பியுள்ளார். ஆனால் அசையாமல் கிடந்ததால் பயந்து போய் மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றார்.

ஆனால் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர்.

குழந்தைகளின் உயிரிழப்புக்கு பிரைட் ரைஸ் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே