பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – பாஜக தேர்தல் அறிக்கை..!!

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநில சட்டப்பேரவைக்கான ஆயுட்காலம் நவம்பர் 29 தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து அம்மாநிலத்தின் ஜக்கிய ஜனதா தள, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை எதிர்கொள்கிறது.

எதிர் அணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேர்தலை சந்திக்கின்றன.

இந்த நிலையில், பாஜக சார்பில் தேர்தல் அறிக்கையை பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், மொத்தம் 11 முக்கிய வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

அதில் முதன்மையாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கொரோனா தடுப்பபூசி இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 5 ஆண்டுகளில் தொழில்நுட்ப பூங்காவின் மையமாக பீகார் மாநிலம் மாற்றப்படும் என்றும், 19 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள், 3 லட்சம் புதிய ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே