இந்திய ராணுவத்திடம் 5 ரஃபேல் விமானங்களை ஒப்படைத்தது பிரான்ஸ்..! (VIDEO)

பிரான்சிலிருந்து ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் இன்று இந்தியாவுக்கு பறந்தது. இந்த 5 விமானங்களும் ஜூலை 29, புதன்கிழமை இந்தியாவுக்கு வந்து சேரும்.

அதைத் தொடர்ந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை கடற்படையில் அதிகாரப்பூர்வமாக சேர உள்ளது.

பிரான்ஸை தளமாகக் கொண்ட டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த போர் விமானங்கள் இரட்டை எஞ்சின்கள், அணுசக்தி திறன் கொண்டவை.

மேலும் அவை வானத்திலேயும், வானத்தில் இருந்து தரையிலும் தாக்குதல்களில் ஈடுபடக்கூடும்.

இந்த விமானங்கள் இந்தியாவை அடைய 7,000 கி.மீ தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. 

வரும் வழியில் வானத்திலேயே எரிபொருள் நிரப்புதல் இருக்கும் என்றும் நடுவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அல் தஃப்ரா விமான தளத்தில் தரையிறங்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்திய விமானப்படை விமானிகள் மற்றும் துணைப் பணியாளர்களுக்கு விமானம் மற்றும் ஆயுத அமைப்புகள் குறித்து டசால்ட் நிறுவனம் முழு பயிற்சி அளித்துள்ளது.

நாட்டின் எல்லை பிரச்னையை கருத்தில் கொண்டு சீனாவுடன் கிழக்கு எல்லையில் உள்ள லடாக் பகுதியில் ரஃபேல் ஜெட் விமானங்கள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படையின் சிறப்புக் கோரிக்கையின் பேரில், ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதை பிரான்ஸ் துரிதப்படுத்தியுள்ளது.

முதலில் நான்கு விமானங்கள் வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இப்போது ஐந்து ஜெட் விமானங்கள் வருகின்றன.

2019 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி மெரிக்னாக் நகரில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்ட விழாவில் பிரான்ஸ் தனது முதல் ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது.

முதல் ரஃபேல் விமானத்துக்கான எண் ‘ஆர்.பி. 01’ என்று கொண்டுள்ளது. ‘ஆர்.பி.’ என்பது ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதவுரியாவை குறிக்கிறது.

பறக்கும் நிலையில் 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்தவர் பதவுரியா.

அனைத்து 36 விமானங்களும் இந்தியாவிடம் 2021 இறுதிக்குள் ஒப்படைக்கப்படும்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே