அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது தேர்தல் தேதி அறிவிப்பு ,தொகுதி பங்கீடு,நேர்காணல் ,வேட்பாளர் அறிவிப்பு என அடுத்தடுத்து உச்சகட்ட பரபரப்பை தமிழக தேர்தல் களம் சந்தித்த வருகிறது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் கடந்த பிப்ரவரி-24 ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் விருப்பமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது.

இக்காலக்கெடு எக்காரணத்தைக் கொண்டும் நீட்டிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமனு பெற்றவர்களிடம் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேர்காணல் நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே