கொரோனாவால் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் உயிரிழப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜூயர் உட்பட சில அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு இருக்க தற்போது முதல் முறையாக கொரோனா தொற்றால் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி (75) கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே