திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன்!

அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான இரா.லட்சுமணன் திமுகவில் இணைந்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (ஆக.18), காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் – விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான மாவட்ட மருத்துவ அணி முன்னாள் செயலாளருமான முன்னாள் எம்.பி. இரா.லட்சுமணன், திமுகவில் இணைந்தார்.

இரா.லட்சுமணனுடன் அதிமுகவைச் சேர்ந்த கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆர்.குப்புசாமி, வானூர் தொகுதி செயலாளர் வி.எம்.ஆர்.சிவா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் இராம.சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.மணவாளன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.என்.முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் எம்.என்.ஏழுமலை, கோலியனூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் என்.ஆர்.மணி, வழக்கறிஞர் இராம்.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி மைலம் எஸ்.வெங்கடேசன், காணை ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் பொன்.குமார், வானூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் டி.கே.குமார் (எ) லட்சுமணசாமி ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி, எம்எல்ஏ, கள்ளக்குறிச்சி நாடாமன்ற உறுப்பினர் பொன்.கௌதம்சிகாமணி, எம்.பி., மற்றும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே