தமிழகத்தில் மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 62 ஆயிரத்து 374 (8,62,374) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்  தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,62,374 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 576 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,43,999 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 08 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,564 ஆக உயர்ந்துள்ளது.

* அரசு மருத்துவமனையில் 04; தனியார் மருத்துவமனையில் 04 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 395 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,39,878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,84,85,460 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 71,888 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 5,811 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,20,916 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 549 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,41,423 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 396 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 258 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 189.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* மேற்கு வங்கம்-3.
* கேரளா-3.
* பீகார்-1.

* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே