முன்னாள் அ.தி.மு.க., எம்.பி. கே.சி பழனிசாமி ஜாமீன் மனு தள்ளுபடி!

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட பிறகும் அக்கட்சியின் சின்னங்களை பயன்படுத்தி வந்தாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியின் ஜாமீன் மனுவை சூலூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் புகார் ஒன்று அளித்திருந்தார்.

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி அக்கட்சியின் பெயரில் போலியான இணையதளம் தொடங்கி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டதாகவும்; அதிமுகவின் சின்னங்களை பயன்படுத்தி வருவதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து கே.சி. பழனிச்சாமி கைது செய்யப்பட்ட நிலையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனு சூலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் வேடியப்பன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது கே.சி. பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை நீதிபதி வேடியப்பன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே