#LIVE : 5ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதை மீட்டெடுக்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

இதையடுத்து, ‘சுயச்சாா்பு இந்தியா’ என்ற பெயரிலான அந்தத் திட்டங்கள் தொடா்பான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறாா். 

அந்த வகையில் 5-ஆவது நாளாக நிலம், தொழிலாளர் நலன், பணப்புழக்கம் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு செய்தியாளா்களிடையே ஞாயிற்றுக்கிழமை அவா் பேசி வருகிறார்.

இதில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்களில் யார் யாருக்கு எவ்வளவு நிதி என்பது குறித்த அறிவிப்புகளை அறிவிக்கிறார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகளுடன் உணவுக் கழகமும் இணைந்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.

சர்வதேச அளவிலான இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் மீண்டு வருவோம்.

இந்தியா மிக சிக்கலான ஒரு கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

8.11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.16,294 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

ஜந்தன் கணக்கு மூலம் மக்களுக்கு நேரடியாக பண உதவி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜந்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்களின் வங்கிக் கணக்கின் மூலம் ரூ.10,025 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. 

குடும்ப அட்டைகளுக்கு உணவு தானியம் மற்றும் பருப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய நிர்மலா சீதாராமன், மாநில அரசுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத்திட்டம், மருத்துவம் மற்றும் கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு பேசி வருகிறார்.

* புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கான ரயில் கட்டணத்தில் 85% மத்திய அரசு வழங்கியது.
* ரயில் கட்டணத்தில் மீதம் 15% தொகையை மாநில அரசு வழங்கியது.

* 12 லட்சம் தொழிலாளர்கள் தங்களது இபிஎப் தொகையில் ஒரு பகுதியை திரும்ப பெற்றுள்ளனர்.
* வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.3600 கோடி எடுக்கப்பட்டுள்ளது.

* சுகாதாரத்துறைக்கு ரூ.15,000 கோடி நிதியை பிரதமர் ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளார்.
* உஜ்வாலா திட்டத்தின் மூலம் 6.81 கோடி மானியமில்லாத சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

* பரிசோதனை மையங்கள் அமைக்க ரூ.550 கோடி செலவிடப்பட்டுள்ளது.
* 2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3,950 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
* அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.
* போக்குவரத்து தட்டுப்பாடு உள்ள நிலையிலும் 3 மாதங்களுக்கு தேவையான பருப்பு வழங்கப்பட்டுள்ளது.

* PPE எனப்படும் பாதுகாப்பு கவச உடைகளை 300 நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன.
* ஊரடங்கில் இந்திய உணவுக்கழகம், வேளாண் கூட்றவு சந்தைகள் சிறப்பாக செயல்பட்டன.
* நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் உள்ள மக்களின் தேவைகளையும் அரசு நிறைவேற்றுகிறது.
* மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

* டிஜிட்டல் முறையில் கல்வி கற்க, பிஎம் இ-வித்யா திட்டம் அறிமுகம்.
* செவி மற்றுத் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்காக சிறப்பு பாடத்திட்டம்.
* நாடு முழுவதும் மேலும் 12 கல்விக்தொலைக்காட்சிகளை தொடங்க திட்டம்.

* ஆன்லைன் மூலம் பள்ளிக்கல்வியை மேம்படுத்த, புதிதாக கல்வி சேனல்கள் தொடங்கப்படும்.
* 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தனித்தனியே சேனல் தொடங்கப்படும். * ஒவ்வொரு வகுப்புக்கும் கல்வி கற்பிக்க தனியாக ஒரு சேனல் தொடங்கப்படும்.

* சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த அனுமதி வழங்கப்படும்.
* சிறந்த கல்வி நிறுவனங்கள் கொண்டு மே 30- முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.
* டிடிஎச்சில் மாணவர்களுக்கு கல்வி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப டாடா ஸ்கை, ஏர்டெல உடன் ஒப்பந்தம்.

* 2025-க்குள் அனைத்து குழந்தைகளும் 5-ம் வகுப்பு வரை படிப்பதை உறுதி செய்யும் திட்டம் டிசம்பரில் அறிமுகம்
* மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும்.
* கொரோனா காலத்தில் ஆன்லைனில் புதிதாக 200 இ-புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆன்லைன் கல்வியில் ஒரே பாடத்திட்டத்தை படிக்க வாய்ப்பு ஏற்படும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்றார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே