தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆதரவு கடிதம் திமுகவிடம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சில கட்சிகளில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறியில் இருந்து கொண்டே உள்ளது.

இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கடிதம் அளித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் கருணாஸைத் தொடர்ந்து தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்துள்ளார். 

சற்று நேரத்திற்கு முன் சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலர் அஜய் வாண்டையார் அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் கடிதம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே