திமுகவிற்கு நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு..!!

சட்டமன்ற தேர்தலில் திமுக-விற்கு கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு அளிப்பதாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார் கருணாஸ்.

கடந்த ஒரிரு நாட்களுக்கு முன் அதிமுக கூட்டணயிலிருந்து விலகுவதாக கருணாஸ் அறிவித்தார்.

இந்நிலையில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் இளைஞர் அணி செயலாளர் அஜய் வாண்டையார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களிடம் தங்களது ஆதரவு கடிதத்தை கொடுத்துள்ளனர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-வை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே