துவங்கியது நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 3 திட்டங்களும், தெருவோர வியாபாரிகளுக்கான ஒரு திட்டமும் அறிவிக்கப்படுகிறது.
தெருவோர வியாபாரிகள், சிறு வணிகர்கள் போன்றோருக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நாடு முழுவதும் 3 கோடி விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது; ரூ.4.22 லட்சம் கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கடன் பெறும் விவசாயிகள் முதல் 3 மாதங்களுக்கு தவணை செலுத்த தேவையில்லை; நாடு முழுவதும் 3 கோடி விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஊரக கிராமப்புற வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.29,500 கோடி கடனுதவி! 25 லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக கடன் அட்டைகள் வழங்கப்படும்! கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஊரக கட்டமைப்புகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு ரூ.4200 கோடி ஒதுக்கீடு!
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிட செலவுக்காக பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
சுய உதவிக்குழுக்கள் மூலம், 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளன;
12,000 சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும்; புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி மத்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது;
100 நாட்கள் வேலை திட்டத்தின்கீழ் 14.62 கோடி மனிதவேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஊரடங்கு காலத்தில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் ஊதியமாக ரூ.10,000 கோடி வழங்கப்பட்டுள்ளது;
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தங்கும் முகாம் அமைக்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!
குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் ESI திட்டம் கட்டாயம்.
தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படும்; வெளிமாநில தொழிலாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஊரக வேலைத்திட்டத்தின் சராசரி ஊதியம் ரூ.182ல் இருந்து ரூ.202 ஆக உயர்வு;
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படும்;
23 மாநிலங்களுக்கு உட்பட்ட 67 கோடி பேர், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் பயனடைவர் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பெரிய நகரங்களில் பயன்படாத அரசு கட்டிங்கள், வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும்.
சிறுவணிகர்களுக்கு முத்ரா திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக தலா ரூ.50,000 கடன் வழங்கப்படும்.
சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக இம்மாத இறுதிக்குள் சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க ரூ,5,000 கோடி ஒதுக்கீடு;
சிறு வணிகர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ரூ.10,000 தொடக்க மூலதனத்துடன் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படும்.
குறைந்த விலையில் வீடு வாங்குபவர்களுக்கு வட்டி மானியம் தொடரும்.
மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ.6,000 கோடி ஒதுக்கீடு அவசரகால நிதி தேவைகளுக்கான கடன் மூலம் 3 கோடி விவசாயிகள் பயன் அடைவர்
நகர்ப்புற ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் குடியிருப்புகள் கட்டித் தரப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் 100% அமல்படுத்தப்படும்! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்