மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் கிழக்கு, மேற்கு கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை கிழக்கு கடற்கரை பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்கு மீன்பிடி தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மற்ற படகுகள் மேற்கண்ட 61 நாட்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கக் கூடாது என்று அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் மீன் விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டது. மீன்கள் வியாபாரமானால் தான் மீனவர்களால் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியும். 

அவர்களுக்கு வேறு ஏதும் தொழில்கள் தெரியாததால் முழுக்க முழுக்க மீன்பிடி தொழிலைச் சார்ந்தே அவர்க்ள் இயக்குவார்கள்.

இதனால் தங்களுக்கு மீன்பிடி தடை கால நிவாரணத்துடன், ஊரடங்கு தடை காலத்தையும் கருத்தில் கொண்டு கூடுதல் நிவாரண நிதி அளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என அனைத்து மீனவர்களின் ஒருமித்த கோரிக்கையாக இருந்தது.

இச்சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின் மீன்பிடி தடை கால நிவாரணமாக மீனவ குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதனால் 1.72 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே