புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, திரையரங்குகளில் படத்தை தொடர்ந்து திரையிட முடிவு செய்துள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள், இரவு 8 மணிக்குள் சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள், ஏப்ரல் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, திரையரங்குகளை மூடலாமா? நேரங்களை மாற்றலாமா? என்ற குழப்பம் நிழுவிவந்த நிலையில், இதுகுறித்து திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன்பின் புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திரையரங்குகளில் படத்தை தொடர்ந்து திரையிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். மேலும், புதிய அரசு அமைந்தவுடன் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கவும் திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.