118 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்ல கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் ஆம்புலன்ஸூக்குள் ஏறி அதன் செயல்பாட்டினை முதல்வர் பார்வையிட்டார்.

அதில் உள்ள கருவிகளின் சிறப்பம்சங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கினார்.

1005 அவசர கால ஊர்திகள் ஏற்கனவே சென்னையில் இயங்கி வரும் நிலையில் கூடுதலாக 118 ஆம்புலன்ஸ்கள் கொரோனா சேவைக்காக புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ளன. 

அடிப்படை வசதிகள், மேம்பட்ட அவசரக்கால உதவிகள் என 60 உபகரணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

கொரோனா நோயாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவை, கொரோனா தொற்று குறைந்த பின் பொதுவான மருத்துவ சேவைக்கு பயன்படுத்தப்படும்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே