பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள, சிலைகளை அகற்ற உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொது இடங்களில், அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும் என்று தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற 2016 மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின்படி வழி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளை அகற்றுவதற்குத் தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே