ஒரு மகள் போல நான் சொல்வதை ஆளுநர் கேட்டது எனக்கு மகிழ்ச்சி என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத் மும்பை காவல்துறை பற்றியும், மும்பை நகரை ஆக்கிரமிப்பு காஷ்மீருடனும் தொடர்புபடுத்தியும் பேசியது சர்ச்சையானது.
இதைத்தொடர்ந்து பந்த்ராவில் உள்ள நடிகை கங்கனாவின் பங்களாவின் ஒரு பகுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி மாநகராட்சி இடித்துத் தள்ளியது.
இதனால் சிவசேன அரசுக்கும் கங்கனா ரனாவத்துக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இதனிடையே மத்திய அரசு கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்தது.
இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை கங்கனா ரனாவத் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் கவர்னர் கோஷ்யாரியைச் சந்தித்தேன். எனக்கு நடந்த அநியாயத்தைப் பற்றி அவரிடம் சொன்னேன். இளம் பெண்கள் உட்பட அனைத்து குடிமக்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க எனக்கு நீதி வழங்கப்படும் என்று நம்புகிறேன். ஒரு மகள் போல நான் சொல்வதை ஆளுநர் கேட்டது எனக்கு மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.