வருகின்ற கல்வியாண்டு முதல் பொறியியல் (BE) பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் படிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

பொறியியல் உள்ள அனைத்து துறைகளின் பாடங்களும் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழிலும் பொறியியல் கல்லூரி படிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என பல வருடங்களாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் கல்வியாளர்கள் தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது அந்த வேண்டுகோள் செவிசாய்க்கப்பட்டுள்ளது.

அதாவது,வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் (BE) பாடங்களை தமிழ், இந்தி, தெலுங்கு, குஜாராத்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 7 மொழிகளில் படிக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது.

மேலும்,பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் மொழி மாற்றவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக,ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பொறியியல் பாடங்கள் தற்போது தாய் மொழியிலும் இடம்பெறும்.

அதுமட்டுமல்லாமல்,பொறியியல் (BE) பாடங்களை 11 இந்திய மொழிகளில் கொண்டு வரவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே