ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகளுக்கு நிதி அறிவிப்பு

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தனது சொந்த நிதியில் இருந்து பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

துணை முதல்வர் பன்னீர்செல்வம் 10 நாள் அரசு பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

கடந்த 12-ம் தேதி அமெரிக்காவின் நெபர்வல்லியில் உள்ள மூத்த குடிமகன்களுக்கான மெட்ரோபாலிட்டன் ஏஷியா பேமிலி சர்வீசஸ் மையம் சார்பில் காந்தியடிகள் பிறந்த நாள் விழா கொண்டாடத்தில் கலந்து கொண்ட அவருக்கு, மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸலன்ஸ் பதக்கம் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் சொசைட்டி, ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பாக விழா நடைபற்றது.

அதில் டெக்சாஸின் ஃபோர்ட்லாண்ட் மேயர் டாம்ரிட், நவம்பர் மாதம் 14-ஆம் தேதியை ஓ.பி.எஸ் DAY என்று அறிவித்து கவுரவித்தார்.

இந்த விழாவில் தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள் என அனைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தனது பங்காக 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 7.1 லட்சம் ரூபாய்) வழங்க இருப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே