ரஷ்யாவிலிருந்து தமிழக மாணவர்கள் நாடு திரும்ப உதவிய சோனு சூட்

ரஷ்யாவில் தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு, தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்து அவர்கள் நாடு திரும்ப, நடிகர் சோனு சூட் உதவியுள்ளார்.

வில்லன் நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் பிறருக்கு செய்யும் உதவிகள் மூலம் ‘ரியல் ஹூரோ’வாக மாறியுள்ளார்.

அவர் செய்யும் உதவிகள் சமூக வலைதளங்களில் வைரலாவதுடன், அவரையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யாவில் தவித்த தமிழக மாணவர்கள், நாடு திரும்ப நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார்.

ரஷ்யாவின் பல்வேறு பல்கலை.,களிலும், எம்.பி.பி.எஸ்., படித்து வந்த தமிழக மாணவர்கள் 90 பேர், கொரோனா ஊரடங்கு, விமான போக்குவரத்து இல்லாததால், நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டுள்ளார். 

அவர்களுக்கு தனி விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ள சோனு சூட், அவர்கள் சென்னை வர உதவி செய்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து நேற்று மதியம் புறப்பட்ட விமானம், நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்துள்ளது.

பத்திரமாக நாடு திரும்பிய மாணவர்கள் நடிகருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே