இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முதல்வர் ஆய்வு ?? – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நடைமுறைகளில் ஒன்றாக இபாஸ் முறை அமலில் உள்ளது.

இ பாஸ் நடைமுறையில் பல தளர்வுகள் கொண்டு வந்தாலும் இதனை முழுமையாக நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசு இபாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் இபாஸ் ரத்து குறித்து கூறியுள்ள அமைச்சர் ஆர். பி. உதயகுமார், “மத்திய அரசின் அறிவுறுத்தல்படி இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். 

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் இ-பாஸ் குறித்து அறிவிப்பார்” என்றார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அரசு அறிவித்தது போல இ-பாஸ் முறைக்கு தளர்வு அளித்தால் சவாலானதாக இருக்கும் என்றார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே