கோவையில் இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி அளித்த புகாரில் விமானப்படை அதிகாரி கைது.
கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி விமானப்படை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் விமானப்படை அதிகாரியை கைது செய்தனர். இதையடுத்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விமானப்படை அதிகாரியை ஓரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய உத்தரவிட்ட நிலையில், உடுமலை கிளை சிறையில் விமானப்படை அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டார்.