13 ஆண்டுகளுக்கு பிறகு கொலிஜியத்தில் பெண் நீதிபதி

நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பில் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் நீதிபதி ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

உச்சநீதிமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் பணிகளை மேற்கொள்கிறது உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பு.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இருக்கும் பாப்டே மூத்த நீதிபதிகள் அடங்கிய புதிய கொலீஜியம் அமைப்பை உருவாக்க இருக்கிறார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோகிண்டன் பாலி நாரிமன், ஆர்.பானுமதி ஆகிய ஐந்து பேர் இடம்பெறவுள்ளன.

நாட்டின் அதிகாரம் வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் கொலீஜியம் அமைப்பில் பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு பெண் நீதிபதி ஒருவர் இடம் பெறுகிறார்.

கடந்த 2006ம் ஆண்டு நீதிபதி ருமாப்பால் கொலீஜியம் அமைப்பில் இடம் பெற்றிருந்தார்.

அவருக்கு அடுத்ததாக சுமார் 13 ஆண்டுகள் கழித்து கொலீஜியம் அமைப்பில் பெண் நீதிபதியான பானுமதி இடம் பெறுகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே