ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் – கேரளா விரைகிறது தனிப்படை!

ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பான விசாரணைக்காக, மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படையினர் கேரளா செல்ல உள்ளனர்.

இந்த தனிப்படையானது பாத்திமாவின் தாயார், சகோதரி மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கேரளாவில் உள்ள பாத்திமாவின் தோழிகளிடமும் தனிப்படையினர் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் பாத்திமாவின் அலைபேசி ஆய்வு முடிவுகள் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்துள்ள அதிகாரிகள், வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 419 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே