நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு நாளை (பிப்.15) நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வழக்கமான கட்டணத்தை விட இருமடங்கு செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான அவகாசம் நாளை நள்ளிரவுடன் முடியும் நிலையில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ஜனவரி 1-ம் தேதி முதல் வாகனங்களில் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், பிப்ரவரி 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே