விளை நிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

விளை நிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு மின்சாரம் கொண்டு வர மத்திய அரசின் பவர் கிரீட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக கோவை, ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல் உட்பட 13 மாவட்ட விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடுகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், இந்த திட்டத்தை புதைவட பாதையாக மாற்ற வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வரும் நிலையில், இன்று 13 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மார்க்சிஸ்ட், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் விவசாயிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே