பிப்.6-இல் சாலை மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்..!!

நாடு முழுவதிலும் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை வரும் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். பிப்ரவரி 6ஆம் தேதி பிற்பகல் 3 மணி நேரம் நடைபெற உள்ள இன்று மறியல் போராட்டத்திற்கு ‘சக்கா ஜாம்’ போராட்டம் என்று பெயரிட்டுள்ளனர் விவசாயிகள்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

70 நாட்களாக கடும் குளிர், மழை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருவதால் அரசு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.

மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் 11 தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்தப்படி உள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் சனிக்கிழமை நாடு தழுவிய “சக்கா ஜாம்” என்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் மூன்று மணி நேரம் மட்டுமே நடைபெறும் நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை போராட்டம் நடைபெறும் போது அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்படும் என்று நேற்று மாலை விவசாயிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

அமைதியாக தொடங்கிய போராட்டம் வன்முறையில் நிறைவடைந்தது. இதனையடுத்து பல சங்கத்தினர் போராட்டங்களை முடித்துக்கொண்டனர்.

டெல்லி காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது விவசாயிகளை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த டெல்லி காவல்துறையினர் பல கட்ட தடுப்புகளை அமைத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே