மதுரை : யானைக் கட்டி போரடித்த விவசாயி..!!

மாடு கட்டி போரடித்தால் மாளாது- செந்நெல்
என்று யானை கட்டி போரடிக்கும் மாமதுரை என்று பாடல் உண்டு.

மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானைகட்டி போடித்த காலமும் உண்டு. அந்தகாலம் மீண்டும் திரும்பியிருக்கிறது மதுரையில். வேதனையில் இருக்கும் விவசாயிகள் இடையே இதுகொஞ்சம் மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தந்திருக்கிறது.

மதுரை மண்ணில் விளைந்த நெல்லின் அளவானது அதிகமாக இருந்த காணத்தினால், போரடிப்பதற்கு மாடுகள் போதாது என்று யானைகளை பயன் படுத்தி போரடித்து உழவு செய்துள்ளனர்.

அந்த நிலைமை இப்போது திரும்பாவிட்டாலும், பழைய நிலையை கேள்விப்பட்டு அதை கண்டு முன் கொண்டு வந்து நிறூத்த வேண்டும் என்று மதுரை அழகர்கோவில் அருகே புலிப்பட்டி கிராமத்தின் விவசாயி மதன். 

இவர் அறுவடை செய்த நெற்கதிர்களில் சுமதி யானை நடந்து போராடித்தது.

சுமதி யானையை நான்கு தலைமுறைகளாக வளர்த்து வருகின்றனர் மதன் குடும்பத்தினர்.

யானை கட்டி போராடித்த காலம்.. யானை கட்டி போரடித்த காலம் என்று பலரும் அடிக்கடி சொல்லி வருவதால், தன்னிடம் யானையும் இருந்ததால், அந்த காலத்தை மீண்டும் கொண்டு வந்து காட்டியிருக்கிறார்.

இது நிஜமாகவேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் ஆசையாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே