குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து டெல்லி – உத்தரப்பிரதேச எல்லையான காசிப்பூர், டெல்லி – அரியானா எல்லையான சிங்கு, திக்ரி ஆகிய எல்லைகளிலிருந்து விவசாயிகள் வெளியேற வலியுறுத்தி பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளை அப்புறப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஜிப்பூர் எல்லையில் விவசாயிகள் மீண்டும் அதிக அளவில் கூடுவதைத் தடுக்கும் வகையில் சாலைகளில் உயர்ந்த தடுப்புகளை அமைத்தும், ஆணி, கம்பி உள்ளிட்டவற்றை சாலையில் புதைத்தும் வைத்திருந்தனர்.

இதனிடையே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (பிப். 4) காசிப்பூர் எல்லையில் விவசாயிகளை சந்திக்கச் சென்றனர்.

அப்போது அவர்கள் எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

எனினும் அவர்கள் விவசாயிகளை சந்திப்பதில் உறுதியாக இருந்ததால், சாலையில் இருந்த ஆணி உள்ளிட்ட கம்பிகளை விவசாயிகளே தங்களிடமிருந்த பொருள்களைக் கொண்டு அகற்றினர்.

இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே