மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளன என்று கூறி எதிர்க்கட்சிகள், விவசாய மற்றும் சமூக நல அமைப்புகள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர் எல்.எல்.ஷர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

தொடர்ந்து வழக்கின் விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.

முன்னதாக, விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் 3 சட்டங்களை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது.

விவசாயிகளுக்கான உற்பத்தி, வா்த்தகம், வணிகம் மேம்படுத்தல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு ஒப்பந்தம் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மசோதா, விவசாய சேவைகள் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மத்திய அரசால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டன.

இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை எனக் கூறி பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே