மூத்த நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி காலமானார் என்ற செய்தி திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர் நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. மே 8, 1946 இல் பிறந்த ஜெயபிரகாஷ் ரெட்டி பிரம்மபுத்ருது என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் நுழைந்தார்.

அங்குள்ள ராயலசீமா பேச்சுவழக்கு மூலம் தனக்கென சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றார்.

வில்லன், நகைச்சுவை நடிகர், குணசித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்து ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவர் தமிழிலில் உத்தமபுத்திரன் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே