வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதை வரவேற்று போராடியவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 11 மாதங்களுக்கு மேலாக தில்லி எல்லையில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும் அதை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முறையாக திரும்பப் பெறப்படும் எனத் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தற்போது அனைத்து தரப்பினரும் வரவேற்று வருகிற நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் , ‘மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்! உழவர் பக்கம் நின்று போராடியதும் – வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்! அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்‘ என முகநூல் பக்கத்தில் தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே