தேனி மாவட்டத்தில் போலி நிருபர்களின் அட்டகாசம்..

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து போலி நிருபர்களின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது.

தேனி மாவட்டத்தில் போலி நிருபர்களின் அட்டகாசம் தலைவிரித்து ஆடும் சூழ்நிலையில், காவல்துறை தற்போது முரளி மற்றும நந்தகுமார் ஆகியோர்கள் தங்களை பிரபல தொலைக்காட்சி நிருபர்கள் என அறிமுகம் செய்து அரசு அலுவலகங்களில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளனர்.

மேலும், மின்சார வாரியத்தில் மின் இணைப்பிற்க்கான கட்டணத்தை கட்டாமல் மற்றும் மின் இணைப்பை துண்டிக்க வந்த கம்பியார் அழகர்சாமியை பணிசெய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தேனி நகர காவல் நிலையத்தில் அழகர்சாமி கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து போலி நிருபர்களாக வலம் வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நமது செய்தியாளர் : C . பரமசிவம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே