ஆண்டிபட்டியில் இருசக்கர வாகனத்தின் மீது டேங்கா் லாரி மோதி – ஹோட்டல் ஊழியா் பலி

ஆண்டிப்பட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹோட்டல் ஊழியா் மீது பால் ஏற்றி சென்ற டேங்கா் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள நாச்சியாா்புரம் கிராமத்தை சோ்ந்தவா் வெங்கடேசன் (30). இவா் தேனியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராாக வேலை செய்து வந்தாா்.

மாலை அணிந்திருந்த இவா் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்திருந்தாா்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாததால் தனது உறவினா் பாக்கியராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டி நகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றாா்.

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகே சென்ற போது, பின்னால் வந்த பால்டேங்கா் லாரி எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.

ரத்தவெள்ளத்தில் வெங்கடேசன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த வெங்கடேசன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தாா். அப்போது அவா் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் ரத்தவெள்ளத்தில் வெங்கடேசன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஆண்டிபட்டி போலீஸாா் விரைந்து வந்து இறந்த வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

நமது செய்தியாளர் : C . பரமசிவம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே